Latestமலேசியா

தியோ பெங் ஹோக் சம்பவம்; போலீசார் 3D ஸ்கேனிங் கருவியைப் பயன்படுத்தி இறப்பு நிகழ்ந்த இடத்தை விசாரிக்கின்றனர்

ஷா அலாம், பிப் 5 – ஷா அலாம் Plaza Masalam கட்டிடத்தில் தியோ பெங் ஹோக் ( Teo Beng Hock ) இறந்த காட்சியை 3D வடிவில் புனரமைக்க போலீசார் 3D ஸ்கேனிங் கருவியைப் பயன்படுத்தி விசாரணையை சீராக்கினர்.

உண்மையில், தியோவின் (Teoh) அதே அளவு மற்றும் உயரம் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவர் தானே விழுந்தாலும் அல்லது குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அது தொடர்பான சூழ்நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதில் உதவி வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம் நடந்த பகுதியை மறுபரிசீலனை செய்வதற்காக நேற்று காலை 10 மணி முதல் போலீஸ் குழு அங்கு இருந்ததாக குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் சுஹாய்லி முகமட் ஸைய்ன் ( Mohd Shuhaily Mohd Zain ) தெரிவித்தார்.

அந்த இடம் இப்போது அலுவலகமாக இல்லாமல் தளவாடப் பொருட்கள் வைக்கும் கிடங்காக இருந்து வருகிறது. தற்போது 15 ஆண்டுகளுக்கு முன் இல்லாத பொருட்களை தாங்கள் பயன்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என அவர் கூறினார்.

நாங்கள் அதை 3D யில் புனரமைக்க முயற்சிக்கிறோம், விசாரணையை மேலும் சீரமைக்க இது எந்த அளவிற்கு உதவும் என்பது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுகள் வெளியாகும்.

இதற்கு முன்பு மொத்தம் 40க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருந்ததாகவும், தற்போது ஐவர் மட்டுமே விசாரணைக்கு அழைக்கப்பட்டதால் விசாரணைக்கு உதவ இன்னும் அதிகமான சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்றும் முகமட் சுஹைலி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!