Latestமலேசியா

திரங்கானுவில், கணவனால் தாக்கப்பட்ட பெண் ; தலையில் படுகாயம்

டுங்குன், ஏப்ரல் 9 – திரங்கானு, டுங்குன், கெத்தெங்கா ஜெயாவில், கணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.

நேற்றிரவு மணி பத்து வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

பெறாமை காரணமாக, 64 வயதான உள்நாட்டு ஆடவன், அரிவாளை கொண்டு சரமாரியாக தனது 39 வயது மனைவியை தாக்கியதாக, டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் மைசூரா அப்துல் காடிர் தெரிவித்தார்.

அந்த தாக்குதலுக்கு முன் வாய்ச்சண்டையின் போது, அப்பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோரியதாக கூறப்படுகிறது.

அதனால், சினத்தின் உச்சிக்கு சென்ற அவ்வாடவன் நீண்ட அரிவாளை எடுத்து அவரை தாக்கியுள்ளான்.

அதனால், நெற்றியில் இன்பது சென்டிமீட்டர் நீளத்திற்கு காயத்திற்கு இலக்கான அப்பெண்ணுக்கு, பத்து தையல்கள் போடப்பட்டுள்ளன.

அச்சம்பவத்துக்கு பின் தப்பி ஓடி விட்ட, அவ்வாடவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!