ஜெர்த்தே, டிசம்பர்-1 – திரங்கானு, ஜெர்த்தேவில் வியாழக்கிழமைக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆட்டிசம் குறைபாடு கொண்ட இளைஞர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
26 வயது Muhammad Helmi Azman-னின் உடல் கம்போங் ராஜா, சுங்கை கெலுவாங் ஹிலிர் ஆற்றில் நேற்று காலை பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டது.
மரத்தின் கிளையில் சிக்கியிருந்த அச்சடலத்தின் நிலையைப் பார்க்கும் போது, அவர் இறந்து 24 மணி நேரங்களுக்கும் மேலாகியிருக்கலாம் என போலீஸ் கூறியது.
நாட்பட்ட ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது மகனால் பேச முடியாதென்றும், ஒருவேளை தொலைந்துப் போனால் வீடு திரும்ப தெரியாதென்றும் அவ்விளைஞரின் தாயார் கூறினார்.
தொலைந்த நாளிலிருந்து குடும்பாத்தாரும் கிராம மக்களும் இரவு பகலாகத் தேடிய நிலையில், உயிரற்ற நிலையில் தான் மகன் திரும்பக் கிடைத்திருப்பதாக பெசூட் மருத்துவமனையில் அவர் சோகத்துடன் கூறினார்.