பெசூட், செப்டம்பர் -25, திரங்கானு பெசூட்டில் 100 கிலோ கிராம் எடையிலான பெரிய மலைப்பாம்பை, தீயணைப்பு-மீட்புத் துறை வீரர்கள் வெறும் ஐந்தே நிமிடங்களில் இலாவகமாகப் பிடித்தனர்.
கம்போங் ராஜாவில் ஒரு வீட்டின் முன்புறமிருந்து 10 நீளத்திலான அப்பாம்பு இன்று காலை பிடிபட்டது.
பெசூட் தீயணைப்பு நிலையம் சுமார் 50 மீட்டர் தொலைவில் மட்டுமே இருந்ததால், பாம்பைப் பிடிக்க வசதியாகப் போனது.
அருகிலுள்ள புதர் பகுதியிலிருந்து வந்திருக்கலாமென நம்பப்படும் அம்மலைப் பாம்பு, பின்னர் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காங்கள் துறையான PERHILITAN வசம் ஒப்படைக்கப்பட்டது.