Latestமலேசியா

திரங்கானுவில் RXZ மோட்டார் சைக்கிளோட்டிகளின் ஒன்றுகூடல்; சாலை விதிமுறைகளை மீறியவர்களுக்கு விரைவில் சம்மன்

குவாலா நெரூஸ், செப்டம்பர் -15 – பல்வேறு சாலைக் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படும் RXZ Members 6.0 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு விரைவிலேயே சம்மன் அனுப்பப்படும் என போலீஸ் கூறியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பக்கவாட்டு கண்ணாடி இல்லாதது, அதிக இரைச்சலைத் தரும் ekzos பயன்பாடு போன்ற குற்றங்களை அவர்கள் புரிந்திருக்கின்றனர்.

எனவே, வாகனப் பதிவின் போது கொடுக்கப்பட்ட முகவரிகளில் உரிமையாளர்களுக்கு சம்மன்கள் வந்து சேரும் என, திரங்கானு போலீஸ் தலைவர் Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார்.

Gong Badak-கில் உள்ள திரங்கானு மோட்டார் பந்தயத் தளத்தில் நேற்று முடிவுற்ற RXZ மோட்டார் சைக்கிளோட்டிகளின் 6-வது ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்து அவர் பேசினார்.

ஊராட்சி மன்றத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட அந்நிகழ்வில் சிலர் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றவில்லை.

நெரிசல் ஏற்படும் என்பதாலேயே அவர்களுக்கு உடனடியாக சம்மன்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் நிச்சயமாக சம்மன்கள் வீடு வந்து சேரும், காத்திருங்கள் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!