Latestமலேசியா

திராங்கானுவில், பராமரிப்பாளரிடம் விடப்பட்ட 5 மாத குழந்தைக்கு கை முறிவு, தலையில் இரத்தக்கசிவு ; போலீஸ் விசாரணை

சுக்கை, ஜூன் 14 – திராங்கானு, கெமாமான், பாயா பெரெஞ்சூட்டிலுள்ள, பராமரிப்பாளர் ஒருவர் இல்லத்தில் விட்டு செல்லப்பட்ட ஐந்து மாதப் பெண் குழந்தை ஒன்றின், இடது கை முறிந்த நிலையில், தலையில் இரத்தம் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவத்திற்கு முன்னதாக, நேற்று காலை, வேலைக்கு செல்வதற்கு முன் அக்குழந்தையின் தாயார், 29 வயது பராமரிப்பாளர் வீட்டில் அக்குழந்தையை விட்டுள்ளார்.

எனினும், காலை மணி 11 வாக்கில், குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக, பராமரிப்பாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைக்கவே, பராமரிப்பு இல்லத்திற்கு திரும்பிய தாய், தனது குழந்தை சோர்ந்து போயிருப்பதை கண்டுள்ளார்.

அதனால், அவர் உடனடியாக அக்குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், அக்குழந்தையின் இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதும், அதன் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தததாக, கெமாமான் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹன்யான் ரம்லான் (Hanyan Ramlan) தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, குழந்தையின் தாயார் செய்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பராமரிப்பாளர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதையும், ஹன்யான் உறுதிப்படுத்தினார்.

அக்குழந்தையின் நிலை தற்போது சீராக இருக்கும் வேளை ; 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!