
திருச்சி, ஜன 16 – திருச்சியிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசின் மூன்றாவது முக்கிய நகரான சார்ஜாவுக்கு புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தொழிந்நுட்ப கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவ்விமானத்திலிருந்த அனைத்து 184 பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். இன்று காலை மணி 9.05 அளவில் திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாரானது. அப்போது திடீரென அவ்விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் அமர்ந்திருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டதால் அவர்கள் பரபரப்படைந்தனர். தொழிற்நுட்ப பணிகளை சரிசெய்யும் பணியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. அதனை தொடர்ந்து அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் சார்ஜாவுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.