Latestமலேசியா

திருடப்பட்ட 1MDB -யின் 70 % பணம் திரும்ப பெறப்பட்டு விட்டது ; MACC

கோலாலம்பூர் , மார்ச் 25 – 1MDB நிறுவனத்தில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் 1 கோடி அமெரிக்க டாலர் பணத்தை, Astro -வின் தலைமை நிர்வாகி, Datuk Rohana Rozhan , அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்து விட்டதை, MACC- மலேசிய ஊழல் தடுப்பு ஆணயத்தின் தலைவர் Tan Sri Azam Baki உறுதிப்படுத்தினார்.

அந்த தொகை , 1MDB -யுடன் தொடர்புடையது என அறிந்திருக்காத Rohana , MACC- யின் விசாரணைக்குப் பின்னர் சுயமாகவே அந்த பணத்த திரும்ப ஒப்படைத்து விட்டதாக அவர் கூறினார்.

இதனிடையே, 1MDB -யில் இருந்து திருடப்பட்ட மொத்த பணத்தில் 70 விழுக்காடு தொகை அதாவது 2, 893 கோடி ரிங்கிட் தொகை திரும்ப பெறப்பட்டு விட்டதாக Azam Baki குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!