
நெகிரி செம்பிலான், ஜன 24 – ஜெம்புலில், வீடென்றில் புகுந்து கொள்ளையிட சென்ற ஆடவன், பின்னர் அங்கிருந்த மதுபானத்தை குடித்து விட்டு உறங்கிப் போன சம்பவம் அவனுக்கே வினையானது.
காலை மணி 6.15 வாக்கில், உறக்கம் கலைந்து எழுந்து வந்த 65 வயது வீட்டின் உரிமையாளர், வீட்டின் வரவேற்பு அறையில் படுத்திருந்த ஆடவனை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக போலீசாரை தொடர்புக் கொண்டார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 41 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவனை கைது செய்ததோடு, திருட்டுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.