லண்டன், பிப் 23 – 42 லட்சம் பவுண்ட்ஸ் ஸ்டெர்லிங் மதிப்புள்ள வைரக்கற்களைத் திருடி அவற்றுக்கிப் பதிலாக கூழாங்கற்களை வைத்து விட்டுச் சென்ற பெண் ஒருவர், 250 பவுண்ட்ஸ் ஸ்டெர்லிங்கிற்கும் குறைவானத் தொகையையே இழப்பீடாக செலுத்தும்படி பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தன்று 60 வயதான Lulu Lakatos எனும் அந்த பெண், Mayfair –ரில் உள்ள Boodles நகைக் கடையில் , ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தரப்பின் சார்பாக, ஏழு வைரக்கற்களை மதிப்பிடுவதற்காக தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அப்போது அந்த பெண் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.
இதனிடையே, Lakatos கைது செய்யப்படும்போது அவரிடம் வெறும் 245 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் தொகை மட்டுமே சொத்தாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து அந்த தொகையையே, திருடிய வைரக்கற்களுக்கு இழப்பீடாக வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் அந்த பெண்மணிக்கு ஏற்கனவே ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.