
கண்டஹார், ஜன 18 – குற்றச் செயல்களுக்காக, மக்களுக்கு பொதுவில் கடுமையான தண்டனையை வழங்கி வரும் தலிபான் அரசாங்கம், அண்மையில் திருடிய குற்றத்திற்காக, பொதுவில் நால்வரின் கைகளை வெட்டி தண்டனையை வழங்கியது.
ஆப்கானிஸ்தான், Kandahar – ரிலுள்ள காற்பந்து அரங்கில், பொது மக்கள் முன்னிலையில் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதே அரங்கில் முன்னதாக, தலிபான் அரசாங்கம், கொள்ளையிட்டதற்காகவும் , ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதற்காகவும் ஒன்பது பேருக்கு பொதுவில் பிரம்படி தண்டனையை வழங்கியிருந்தது.