Latestஉலகம்

விசா தாராளமய திட்டம் ; இந்தியா, சீனாவிலிருந்து வருகை புரியும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 78.2% அதிகரிப்பு

பேங்கோக், ஏப்ரல் 19 – விசா தாராளமய திட்டம் அறிமுகம் கண்ட மூன்று மாதங்களில், நாட்டிற்கு வருகை புரிந்த சீன மற்றும் இந்திய சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை, 78.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பரில் அத்திட்டம் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டதிலிருந்து அமைச்சு தொடர்ந்து அதனை கண்காணித்து வருவதாக கூறிய சைபுடின், இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும், நாட்டிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை, எட்டு லட்சத்து 61 ஆயிரமாக அதிகரித்து ஊக்கமளிக்கும் வகையில் பதிவுச் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

அதில் பெரும்பாலானோர் சீன மற்றும் இந்திய சுற்றுப் பயணிகள் ஆவர். அதன் வாயிலாக, நாட்டின் தங்கும் விடுதி தொழில்துறை, போக்குவரத்து, உணகவம் உட்பட அனைத்து சார்ந்து இயங்க்கும் இதர துறைகள், 600 கோடி ரிங்கிட் வரையில் வருமானத்தை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக சைபுடின் சொன்னார்.

அதிக வருமானத்தை ஈட்டும் ஆற்றலை சுற்றுலா துறை கொண்டுள்ளது. அதனால், அதிக எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகளை கவர கூடுதல் வசதிகளை செய்து தருவது அவசியம்.

அதனை கருத்தில் கொண்டு, குறிப்பாக நாட்டின் நுழைவாயில்களில், நெரிசலை தவிர்க்க ஏதுவாக, “முக அடையாள தொழில்நுட்பம்” அல்லது “பார்கோட்” தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது குறித்து மலேசியா ஆராய்ந்து வருவதாகவும் சைபுடின் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!