கோலாலம்பூர், மார்ச் 14 போலீசாரிடமிருந்து திருட்டுக் காருடன் தப்பியோட முயன்ற ஆடவன் கைது செய்யப்பட்டான். எனினும் அக்காரில் இருந்த மற்றொரு ஆடவன் தப்பியோடினான். அந்த காரை நிறுத்தி ரோந்து காரைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் பரிசோதிக்க முயன்றபோது அந்த ஆடவன் வேகமாக காரை செலுத்த தொடங்கினான்.
அப்போது அங்கிருந்த இதர வாகனங்களையும் அங்காடிக் கடைகளையும் அவன் மோதிச் சென்றான். திரைப்படங்களில் வருவதைப் போன்ற அந்த காட்சி அதிகாலை மணி 12. 15 அளவில் தித்திவங்சா பூங்காவில் நடைபெற்றது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் அக்காரை விரட்டிச் சென்று அதன் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். அக்காரிலிருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றதாக கோலாலம்பூர் போலீஸ் சி.ஐ.டி தலைவர் SAC Habibi Majinji தெரிவித்தார்.