
திருமலை, ஜன 2 – திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்ப்புக்களையும் தாண்டி கடந்த ஆண்டில் அந்த ஆலயத்தின் வருமானம் ரூ 1,441 .34 கோடியாக உயர்ந்துள்ளது. தேவஸ்தான வரலாற்றில் அதிக அளவில் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது புதியதொரு சாதனையாகும். கோவிட் தொற்று பரவலால் இரண்டு ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் அதுவாகும். ஆயிரம் கோடி ரூபாயையும் தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பதில் 11 கோடியே 42 லட்சம் லட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.