Latestஇந்தியாஉலகம்

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் – ஆய்வுக் கூட சோதனையில் அதிர்ச்சித் தகவல்

திருப்பதி, செப்டம்பர் -20, ஆந்திராவில் முந்தைய ஆட்சியின் போது திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இது ஆந்திரா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரச் செய்துள்ளது.

லட்டில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய், செம்பனை எண்ணெய், சோயா எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதை, தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கை உறுதிச் செய்துள்ளதாக, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

ஆனால், இதுதொடா்பாக ஆந்திர அரசோ, திருமலை திருப்பதி தேவஸ்தானமோ அதிகாரபூா்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

முந்தைய YSR ஆட்சியின் போது, திருப்பதியில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருள்களால் லட்டு தயாரிக்கப்பட்டதாக ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னதாகக் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது திருப்பதியில் சுத்தமான நெய் கொண்டு லட்டுகள் தயாரிக்கப்பட்டு, கோவிலின் தரமும் மேம்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அது அரசியல் உள்நோக்கம் கொண்டதென கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆய்வக அறிக்கை சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை நிரூபித்துள்ளதாக வெளியான செய்தி அங்கு தீயாய் பரவி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!