
திருப்பதி, செப் 5 – இன்று திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் பெற்றனர் ஷா ருக் கானும், அவருடன் ‘’Jawan’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை நயந்தாராவும். அவர்களுடன் ஷா ருக்கானின் மகள் சுஹானாவும், நயந்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஸ் சிவனும் உடன் இருந்தனர்.
திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அவர்களை வரவேற்று சுவாமி தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்தனர்.
அவர்களின் திருப்பதி தரிசன காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் ‘’Jawan’ திரைப்படம் எதிர்வரும் வியாழக்கிழமை திரை அரங்கிற்கு வர வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.