
கிழக்கு ஜாவா, செப்டம்பர் 11 – திருமண ஜோடிக்கும், புதுமையான “காதல் நினைவுகளை” வழங்க வேண்டுமென, நினைத்த திருமண ஏற்பாட்டாளர் ஒருவரின் செயல் விபரீதத்தில் முடிந்தது.
அந்த 40 வயது ஆடவர் தற்சமயம் கைதுச் செய்யப்பட்டு குற்றம்சாட்டபடவுள்ளார்.
புரோமோ மலையிலுள்ள, தேசிய பூங்காவின் சுமார் 50 ஹெகடர் புல் தரை தீயில் அழிய அவர் காரணமாக இருந்ததாக கூறபடுவதே அதற்கு காரணம் ஆகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், 150 கோடி ரூபியா அல்லது நான்கு லட்சத்து 56 ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
பட்டாசுகளை பயன்படுத்தி, திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களை எடுக்க வேண்டும் எனும் அவரது புதுமையான சிந்தனையால் ஏற்பட்ட விபரீதம் என கூறப்படுகிறது.
வெப்பம் காரணமாக, புரோமோ மழையிலுள்ள புல் தரை காய்ந்து கிடந்ததால், எளிதாக தீ பற்றியது. அதோடு, தீ ஏற்பட்டதும், அதனை அங்கிருந்த யாரும் அனைக்க முயலவில்லை என்பதால், அது முற்றாக தீயில் அழிந்ததாக, புரோமோ மலை நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
அதோடு, அந்த திருமண ஏற்பாட்டாளர், முறையான அனுமதி இன்றி மலைப் பகுதியில் நுழைந்ததும் தெரிய வந்துள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், அந்த தீயை அணைக்க தீயணைப்பு மீட்புப் படை இன்னமும் போராடி வருவது தான்.
அந்த மோசமான தீச்சம்பவத்திற்கு, இந்தோனேசிய மக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.