Latestஉலகம்

திருமணமாகி 12 ஆண்டுகள் குழந்தை இல்லை; உதவுவதாகக் கூறி 20 முறை கற்பழித்த மந்திரவாதி

இந்தோனேசியா, செப் 6 – திருமணமாகி 12 ஆண்டுகள் குழந்தை பிறக்காத நிலையில், மந்திரவாதியின் உதவியை நாடிய பெண் ஒருவருக்கு காத்திருந்தது ஏமாற்றம் மட்டுமல்ல இன்னொரு பிரச்சனையும் தான். தன்னால் குழந்த வரம் கிடைக்க உதவ முடியும் எனக்கூறிய அந்த மந்திரவாதி அப்பெண்ணை 20 முறை கற்பழித்துள்ளான். இச்சம்பவம் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.

முதலில் தனது கணவருடன் அந்த ஆசாமியைச் சந்தித்த அப்பெண், அடுத்தடுத்த சந்திப்புகளில் கணவருக்கு வேலை என்பதால் தனியாக போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்பெண்ணின் உடலில் ஏதோ தவறான பொருள் இருப்பதாக கூறி, அப்பெண்ணிடம் அந்த மந்திரவாதி 20 முறை தவறாக நடந்துக் கொண்டுள்ளான்.

மந்திரவாதியின் மேல் இருந்த பயத்தினால், அப்பெண்ணும் இவ்விவகாரத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இதற்கிடையில், அப்பெண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இச்சம்பவத்தை போலிஸ் விசாரித்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!