
ஹாங்காங், ஆகஸ்ட்டு 30 – கிழக்கு சீனாவிலுள்ள, மாவட்டம் ஒன்றில், 25 அல்லது அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்துக் கொள்ளும் இளம் ஜோடிகளுக்கு ஆயிரம் யுவான் அல்லது சுமார் 636 ரிங்கிட் வாழ்க்கை செலவுப் படி தொகையாக வழங்கப்படுகிறது.
சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு சரிவை எதிர்நோக்கியுள்ளது.
அதனால், இளம் ஜோடிகள் திருமணம் செய்துக் கொள்ளவும், குழந்தை பெறவும் ஊக்குவிக்கும் வகையில் அந்த சிறப்பு சன்மானம் வழங்கப்படுகிறது.
குழந்தை பராமரிப்பு, கருவுறுதல், குழந்தைகள் உள்ள தம்பதியருக்கான கல்வி மானியம் ஆகியவையும் அதில் அடங்கும்.
கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவில் பிறப்பு விகிதம் மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளதோடு, முதியவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு அந்நாட்டில் திருமணம் செய்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்துக்கும் கீழ் பதிவான வேளை ; 1986-ஆம் ஆண்டுக்கு பின்னர், பதிவுச் செய்யல்பட்ட மிக குறைவான எண்ணிக்கை அதுவென கூறப்படுகிறது.
அதிகரித்துள்ள வாழ்க்கை செலவினம், குழந்தை பராபரிப்பு செலவுகள், பாலின பாகுபாடு காரணமாக வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பெண்களிடம் திணிக்கப்படுவது ஆகிய காரணங்களால், அந்நாட்டில் திருமண விகிதமும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.