
ஷானா,மார்ச் 9-ஏமன்-னில் திருமண கோஷ்டியை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர்.
படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர்.
இந்த படகுமர Hodeidah நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது.
ஏமன் நாட்டின் மிகப்பெரிய Kamaran தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருமண கோஸ்டி படகில் சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சிலரை காப்பாற்றினர்.