Latestமலேசியா

திருமண நிகழ்வில் நடனமாடிய ஆடவர் மாரடைப்பால் கீழே விழுந்து மரணம் காணொளியில் வைரலானது

சட்டிஸ்கார், மே 11 , உலகம் முழுவதிலும் இன்றைய நிலையில் மாரடைப்பு மிகப் பெரிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துகிறது. நம் கண் முன்னே சுறுசுறுப்பாக இருக்கும் விளையாட்டாளர்கள் உட்பட பலர் திடீரென ஏற்படும மாரடைப்பினால் கிழே விழுந்து உயிரிழப்பது உலகில் அங்காங்கே நடைபெறும் வழக்கமான நிகழ்வாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில் இந்தியாவில் Chhatisgarh ரில் தமது உறவினரின் திருமண விழாவில் கலந்துகொண்ட இளம பொறியியலார் ஒருவர் நடனம் ஆடி நிகழ்ச்சியில் வந்தவர்களை மகிழ்வித்துக் கொண்டிருநத வேளையில் திடிரென மேடையில் அமர்க்கிறார். அடுத்த சில வினாடிகளில் அவர் கீழே விழுகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் முதலுதவி வழங்கிய போதிலும் மரணம் அடைந்தார். திருமண நிகழ்வை சோகமயமாக்கிய அந்த காட்சி காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து வலைததளவாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!