
கெமாமான், மே 14 – தங்களின் திருமண மோதிரத்தை வாங்கிவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பிய ஒரு தம்பதியரின் நாள் மீள முடியாத துயரத்தில் முடிந்துள்ளது.
கெர்தேவிலிருந்து டுங்கூனுக்கு திரும்பிக் கொண்டிருந்த அவர்களின் கார் எதிர்புறத்திலிருந்து வந்துக் கொண்டிருந்த கட்டுபாட்டை இழந்த காரால் மோதப்பட்டதில் விபத்துக்குள்ளானது. அதில் துரதிஸ்டவசமாக தலையிலும் உடலிலும் பலத்த காயத்திற்குள்ளான மணமகன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், மணமகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.