திருவண்ணாமலை, செப்டம்பர் -4, தமிழகத்தின் திருவண்ணாமலையில் உள்ள செய்யாறு அரசுக் கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சத்தில் கல்விப் பயின்று வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் கழிவறையில் பாம்புகள் அடிக்கடி வந்து போவது மாணவிகளிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
கழிவறைக் குழியில் பாம்புகள் கூட்டமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
‘இங்கே நிறைய பாம்புகள் உள்ளன. உள்ளே செல்ல வேண்டாம்’ என கல்லூரி நிர்வாகமே வெளியில் எச்சரிக்கை வாசகத்தை ஒட்டி வைத்துள்ளது.
ஆனால், போதியப் பராமரிப்பு இல்லாததே கல்லூரி வளாகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
எனவே வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்க மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இப்படி பாம்புகளுக்கு மத்தியில் அனுதினமும் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது என நிர்வாகத்திடம் அவர்கள் தெளிவாகக் கூறி விட்டனர்.