கோலாலம்பூர், ஏப்ரல் 9 – ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் மகிமா இணைந்து திருவிளங்கு சைவத் திருமுறை மாநாட்டை ஏற்பாடுச் செய்துள்ளது.
ஏப்ரல் 27 மற்றும் 28 என இருநாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாடு காலை 9:00 மணி தொடங்கி இரவு 7:30 மணி வரை கோலாலம்பூர் மகா மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறும்.
இதயம் குளிர்விக்கும் இன்னிசைக் கச்சேரி, ஆன்மீக சொற்பொழிவுகள், சைவ சமயம் சார்ந்த சிறப்பு பேருரைகள், தேவாரப் பண்ணிசைகள் ஆகியவையும் இவ்விழாவில் இடம்பெறவிருக்கின்றன.
இம்மாநாட்டில் சைவச் சிந்தனையாளர்களும் பொது மக்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரும் அரங்காவலருமான டான் ஶ்ரீ நடராஜா அழைக்கின்றார்.