
சென்னை , ஜன 24 – கோயில் திருவிழாவின்போது மயிலேறு நிகழ்ச்சியில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் நால்வர் பலியான சம்பவம் தொடர்பில் அதன் ஓட்டுனர் முருகன் மீது 3 பிரிவுகளில் வழங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரக்கணம் நெகிலி தாலுகா கீழவிதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட அந்த துயரச் சம்பவத்தில் 39 வயதுடைய முத்துக்குமார், 40 வயதுடைய பூபாலன் 19 வயதுடைய ஜோதிபாபு ஆகிய மூவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இச்சம்பவத்தில் எண்மர் படுகாயம் அடைந்த நிலையில் புன்னை மருத்துவமனைக்கும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர். . கிரேன் விபத்து தொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.