
கோலாலம்பூர், ஆக 29 – இன்று மலேசியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள மலையாள சமூகத்தினர் திருவோணம் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். வாமன அவதாரம் எடுத்த திருமால் மகாபலி மன்னனை அழித்ததும், அந்த மகாபலி மன்னன் ஆண்டிற்கு ஒரு முறை ஆவணி திருவோண தினத்தில் தனது மக்களை பார்க்க வருவதுமே திருவோண பண்டியையாகும். இந்த பண்டிகையை கேரள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். திருவோண பண்டிகையை அறுவடை திருநாள் என்றும் அழைப்பார்கள். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓண விழா கொண்டாடப்படுகிறது. இன்று திருவோணப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் மலேசிய மலையாளிகள் சமூகத்திற்கு வணக்கம் மலேசியா திருவோண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.