Latestமலேசியா

திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினருக்கு கைது உத்தரவு தேர்தல் நீதிமன்றம் பிறப்பித்தது

கோலாலம்பூர், மார்ச் 17 – மாராங் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மனு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்குவதற்கு வரத்தவறிய திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் Mohd Nor Hamzaவுக்கு எதிராக தேர்தல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. Bukit Payong சட்டமன்ற உறுப்பினரான Mohd Nor Hamzah வுக்கு எதிராக வாதியின் வழக்கறிஞர் Amin Othman கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி Hassan Abdul Ghani கைது வாரண்ட் பிறப்பித்தார். செவ்வாய்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்குவதற்கு வரும்படி முகமட் நோருக்கு ஹசான் பணித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!