Latestமலேசியா

திரெங்கானு, கிளந்தான் மாநிலங்களில் 22,450 பேர் வெள்ளத்தால் பாதிப்பு

கோலாலம்பூர், பிப் 28 – திரெங்கானு, கிளந்தான் ஆகிய இரு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22, 450-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் 234 துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

திரெங்கானு மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,530 -ஆக அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் கெமாமானில் (Kemaman) அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், கிளந்தானில் வெள்ளத்தால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,920-ஆகும். அம்மாநிலத்தில் கோலோக் (Golok) ஆற்று நீரும், கிளந்தான் ஆற்று நீரும் அபாய கட்டத்தை எட்டியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!