Latestமலேசியா

திரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மாரடைப்புக்கு உள்ளாகி மரணம்

லக்னோ , செப் 17 – இந்தியாவில் , உத்தர பிரதேசத்தில் Ghaziabad நகரில் இயங்கிவரும் ஜிம் எனப்படும் உடற்பயிற்சி மையத்தில் திரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த சித்தார்த் என்ற கல்லூ மாணவர் திடீரென மாரடைப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்த சம்பவம் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. திரெட்மில்லில் சித்தார்த் ஓடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் திடீரென நின்று மெதுவாக சுயநினைவை இழந்து திரேட்மில் அருகே சரிந்து விழுவது போன்ற காட்சியைக் கொண்ட காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகியது. இச்சம்பவம் பிட்னஸ் சென்டர் எனப்படும் உடற்பயிற்சி மையங்களுக்கு செல்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சப்பந்தப்பட அந்த மாணவரை உடற்பயிற்சி நிலையத்தில் இருந்த மற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோதிலும் அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!