Latestஇந்தியாசினிமா

திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு    

புதுச்சேரி, அக் 22 – 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்த புகாரில், திரைப்பட இயக்குநர்    ஷங்கரின் மருமகன்  ரோஹிட் உட்பட  ஐவர் மீது, போக்சோ  ( POCSO ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பயிற்சியாளர்  தாமரைக்கண்ணன்  பாலியல் தொல்லை  கொடுத்திருக்கின்றார்.
அதன் தொடர்பில்  கிரிக்கெட் சங்க  நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தவறியதை அடுத்து அச்சிறுமி  சிறார் நல அமைப்பிடம் புகார் அளித்தார்.

அதையடுத்து, சம்பந்தப்பட்ட   பயிற்சியாளர்  ,  கிரிக்கெட்  சங்கத் தலைவர்   தாமோதரன் , அவரது மகனான கிரிக்கெட் அணியின் கேப்டன்  ரோஹிட்  உள்ளிட  ஐவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!