
கோலாலம்பூர், பிப் 3 – 1967 ஆம் ஆண்டின் திவால் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான இறுதிக் கட்ட பணிகளில் திவால் துறை தற்போது ஈடுபட்டு வருகிறது. ஒருவர் திவாலாகிவிட்டதை மீட்டுக்கொள்ளும் காலக்கட்டத்தை குறைப்பதும் இதில் அடங்கும் என சட்டத்துறை அமைச்சர் Azalina Othman தெரிவித்தார். திவால் சட்டத்தின் இதர அம்சங்களின் திருத்தங்கள் குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார். கடன் பெற்றவரின் ஆட்சேபனையின்றி 70 வயதுடையவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களை திவால் நடவடிக்கையிலிருந்து மீட்டுக்கொள்வதை அனுமதிக்கும் முயற்சிகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாக Azalina தெரிவித்தார்.