
கொழும்பு, ஜன 6 – திவால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் நாடு தழுவிய நிலையில் ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் ஊராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தல் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் செல்வாக்கை பரிசோதிப்பதற்கு ஒரு அளவு கோலாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர் . தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்தை மட்டுமே கொண்டுள்ளது. 2018 – ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் 340 இடங்களில் ஐக்கிய தேசிய கட்சி 10 விழுக்காடு இடங்களை மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் SLPP கட்சி 231 இடங்களை வென்றது. ஜனவரி 18 – ஆம் தேதி தொடங்கி 21 – ஆம் தேதிவரை ஊடராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெறவுள்ளன.