
கோலாலம்பூர், நவ 10 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார இறுதியில் மலேசியர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டணமில்லா பயணத்தை அனுபவிக்க முடியும். பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.
நாளை நவம்பர் 11-ஆம் தேதி அதிகாலை மணி 12.01 மணியிலிருந்து நவம்பர் 12-ஆம் தேதி நள்ளிரவு மணி 11.59 வரை டோல் கட்டணம் இல்லாத நெடுஞ்சாலைகளில் அனைத்து வகை வாகனங்களும் இலவசமாக பயணம் செய்ய முடியும் என அவர் கூறினார்.
எனினும் சிங்கப்பூருடன் எல்லையைக் கொண்டுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளான ஜொகூரில் பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் தஞ்சுங் குப்பாங் டோல் சாவடிகளில் இலவச டோல் வசதி உட்படுத்தப்படவில்லை. மக்களின் சிரமத்தை குறைக்கவும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளியை கொண்டாடவும் அமைச்சரவை இந்த முடிவை எடுத்திருப்பதாக அலெக்சாண்டர் நந்தா தெரிவித்தார்.