
கோலாலம்பூர், நவ 10 – இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்துடன் இணைந்து, சபா ஊழல் தடுப்பு ஆணையமான எம். ஏ. சி.சி. தீபாவளி 2023 வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டு பெருநாளில் வெளியான காணொளியைப்போல் இன்றி , இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வீடியோவில் சபா எம்.ஏ. சி.சி. கிளைகளைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
2023-ஆம் ஆண்டின் ஊழலை துடைத்தொழிப்பின் எம்.ஏ. சி.சி-யின் நோக்கத்திற்கு ஏற்ப பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழல் தடுப்பு அமலாக்கப் பிரிவினர், அரசாங்க நிதி கசிவைத் தடுக்கும் பிரிவினரும் அந்த அரசு அதிகாரிகளில் அடங்குவர்.
இந்த வீடியோவை https://youtu.be/CG5LOPrF5Ws யூடியூப் இணைப்பு வழியாக பார்க்கலாம்