லாஹாட் டத்து, நவம்பர்-4 – சபா, லாஹாட் டத்துவில் தீபாவளி நாளன்று 51 வயது ஆடவர் தலையில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்துகிடந்தார்.
நெஞ்சு மற்றும் இடுப்புப் பகுதியிலும் காயங்கள் காணப்பட்டன.
கொலைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் அவரின் சடலம், Batu 3-வில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து கொலையுண்டவரின் மனைவி உள்ளிட்ட நால்வர் விசாரணைகளுக்காகக் கைதாகியிருப்பதை, லாஹாட் டத்து போலீஸ் உறுதிப்படுத்தியது.
அம்மாதுவும், இரு ஆடவர்களும் சம்பவத்தன்றே கைதான வேளை, மற்றோர் ஆடவர் மறுநாள் கைதானார்.
கொலைக்கானக் காரணம் கண்டறியப்பட்டு வருவதால், யாரும் யூகங்களை எழுப்ப வேண்டாமென போலீஸ் கேட்டுக் கொண்டது.