
கோலாலம்பூர், நவ 8 – செராஸில் ஸ்ரீ சபா பொது வீடமைப்பு பகுதியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் நேற்று காலை மணி 11.45 அளவில் தீபாவளி நன்கொடை வழங்கும் நிகழ்வின்போது அந்த தகராறு ஏற்பட்டதாக செராஸ் ஓ.சி.பி.டி துணை கமிஷனர் ஸாம் ஹலீம் ஜமாலுடீன் தெரிவித்தார். அந்த நிகழ்சியின்போது கடமையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் அங்கு ஏற்பட்ட கைகலப்பை தடுத்து நிறுத்தினர்.
26 மற்றும் 36 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் இதற்கு முன் எந்தவொரு குற்றப் பின்னணியும் கொண்டிருக்கவில்லை. எனினும் விசாரணை அறிக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என ஸாம் ஹலீம் தெரிவித்தார்.