Latestமலேசியா

தீபாவளி விருந்தோம்பலுடன் திறப்பு விழா கண்டது பூச்சோங் 14ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாநாட்டு மண்டபம்

பூச்சோங், நவம்பர் 16 – நாட்டில் பழமை வாய்ந்த இந்து ஆலயங்களில் ஒன்று பூச்சோங் 14ஆவது மைலில் அமைந்துள்ளா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்.

சுமார் 130 ஆண்டுகளுக்கு மேலாக பூச்சோங் வட்டார மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் இந்த ஆலயம், இப்போது அதன் அருகில் மூன்று மாடிகள் கொண்ட மாநாட்டு மண்டபத்துடன் மிகவும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

நேற்று இம்மண்டபத்தின் கீழ்த் தளம் திறப்பு விழா கண்ட நிலையில், சுற்று வட்டார மக்களுக்கு அங்கு தீபத்திருநாளையொட்டி விருந்தோம்பல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மூன்று மாடிகள் கொண்ட இந்த மண்டபத்தைத் திருமணம் உட்பட அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்கிறார் பூச்சோங் 14ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயமும் மண்டபத்தின் தலைவருமான டத்தோ டாக்டர் ஏ.பி.சிவம்.

இந்த மண்டபத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்தியச் சமுதாயத்திற்கும் இந்தியச் மாணவர்களின் கல்வி நிதிக்கும் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

அடுத்தாண்டு ஜனவரி முதல் செயல்படவுள்ள இந்த மண்டபத்திற்கு பொது மக்கள் இப்பொழுதே Advanced event management sdn bhd வழி பதிவு செய்யத் தொடங்கலாம் என்றார் இதன் நிர்வாக இயக்குநர் டத்தோ சிவக்குமார்.

ஆலயத்தின் சமூக கடப்பாட்டுத் திட்டங்களுக்கும் சுற்று வட்டார பொது மக்களுக்குப் பயனாக அமைந்துள்ள இம்மண்டபத்தின் கீழ்த் தளத் திறப்பு விழாவிற்கு, ஆலய செயலவை உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!