Latestமலேசியா

தீபா மத மாற்றத்திற்கு வறுமை காரணம் அல்ல – செகு ராமசாமி விளக்கம்

கோலக் கெட்டில், ஆக 8 – கோலாக் கெட்டில் வட்டாரத்தில் தீபா டேவிட் என்ற 32 வயது இந்தியப் பெண் வறுமையின் காரணமாக மத மாற்றம் செய்யப்பட்டாக வெளியான தகவல் உண்மையில்லை என கோலா கெட்டிலைச் சேர்ந்த ம.இ . காவின் சமூக சேவகர்களில் ஒருவரான செகு இராமசாமி தெரிவித்தார். மலக்கோப் தோட்டத்தில் வசித்து வந்த தீபா ஏற்கனவே திருமணமானதோடு அவருக்கு 5 குந்தைகளும் உள்ளன. அவர் அண்மைய காலமாக வங்காளதேச ஆடவரோடு நட்புக் கொண்டு பழகியதாக தெரிகிறது. இத்தகவலை அறிந்த அப்பெண்ணின் கணவர் தமது நான்கு பிள்ளைகளையும் தனது பாதுகாப்பில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் சுய விருப்பத்தின் பேரில் மதம் மாறி தீபா ஆடவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் செகு ராமசாமி தெரிவித்தார். அந்த பெண்ணிற்கும் அவரது பெற்றோர் டேவிட் குடும்பத்திற்கும் ம.இ.கா வழியும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் மூலமாக உணவுப் பொருட்கள் உடபட பல்வேறு உதவிகளையும் பெறுவதற்கும் தாம் ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார். சுய விருப்பத்தின் பேரில் மதம் மாறி புதிய ஆடவரை மறுமணம் செய்து கொள்வது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமையாகும். எனவே வறுமை காரணமாகவும் ம.இ,கா மற்றும் சமூக தலைவர்கள் உதவி வழங்காததால் மதம் மாறியதாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ராமசாமி கேட்டுககொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!