Latestஇந்தியா

தீபிகா படுகோனுக்கும் குடும்பத்தினருக்கும் கோவிட் தொற்று

புது டில்லி,மே 5 –  இந்தியாவில் கோவிட் -19  தொற்றுக்கு இலக்காகிவரும் பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டு வரும் நிலையில், தற்போது அதன் வரிசையில் போலீவூட் நடிகை தீபிகா படுகோனும் இணைந்திருக்கின்றார்.

ஏற்கனவே, அவரது பெற்றோரும் சகோதரியும்  அந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அந்த நடிகை தற்போது தனது சொந்த ஊரான  பெங்களூரில் இருப்பதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீபிகாவின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் தேசிய பூப்பந்து விளையாட்டாளருமான பிரகாஷ் படுகோன், கோவிட் தொற்றால்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!