ரந்தாவ் பஞ்சாங், பிப் 28 – தொடர்ந்து பெய்த மழையினால் Rantau Panjang தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவில் வெள்ளம் ஏற்பட்ட போதிலும் நேற்று காலையில் வெள்ள நீர் வடிந்தது. அதே வேளையில் இந்த வெள்ளத்தினால் Ratau Panjang தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மீட்பு நடவடிக்கைளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
அந்த நிலையம் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் உற்சாகத்தை இழக்காமல் நல்ல மனோநிலையில் இருந்து வருவதாக கோத்தா பாரு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் சூப்பிரடன்ட் சுஹாய்மி மாமுட் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டிலும் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.