
மலாக்கா, மே 15 – தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையை மறுசீரமைப்பதற்கான ஆலோசனைகளில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தும் என ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் Nga Kor Ming தெரிவித்துள்ளார். தீயணைப்புத்துறை பணியாளர்களின் நடப்பு நிலையை மேம்படுத்துவது மற்றும் அந்த துறைக்கான பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற அம்சங்களில் கட்டம் கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். மலேசியாவில்
33.57 மில்லியன் மக்கள் இருக்கின்றனர். அவர்களில் 15,000 பேர் மட்டுமே தீயணைப்பு மற்றும் மீட்பு படையில் உள்ளனர். ஆனால் ஒரு ஆண்டுக்கு 100,000த்திற்கும் மேற்பட்ட அவசர அழைப்புகளை தீயணைப்புத்துறை பெற்றுவருவதாக Nga Kor Ming சுட்டிக்காட்டினார். அதோடு தீயணைப்பு வீரர்களுக்கான சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகையை மேம்படுத்துவது மற்றும் சமூக நல விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் இந்த மறுசீரமைப்பில் அடங்கும் என Nga Kor Ming கூறினார்.