
12 புதிய மோப்ப நாய்களை பெறுவதற்காக, தீயணைப்பு மீட்புப் படை முன் வைத்த கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தேடி மீட்கும் பணிகளை மேம்படுத்த அவை உதவியாக இருக்குமென, தீயணைப்பு மீட்புத் துறையின் தலைமை செயலாளர் டத்தோ அப்துல் வஹாப் மாட் யாசின் தெரிவித்தார்.
புதிய மோப்ப நாய்களை பெறுவதற்கான விண்ணப்பம், பத்தாங் காலி நிலச்சரிவு நிகழ்வதற்கு வெகு நாட்களுக்கு முன்பே முன் வைக்கப்பட்டு விட்டது. எனினும், தற்போது அதற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து அப்துல் வஹாப் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தற்சமயம், தீயணைப்பு மீட்புப் படையிடம் 36 மோப்ப நாய்கள் இருக்கும் வேளை ; அண்மையில், துருக்கியேவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது, 12 பாகை செல்சியசுக்கும் கீழ் பதிவான கடும் குளிரில் சளைக்காமல் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரலாறு படைத்த Denti-யும், Frankie-யும் அதில் அடங்கும்.