
கோலாலம்பூர், ஜன 20 – மக்களுக்கான தங்களது சேவையை மேம்படுத்த மலேசிய தீயணைப்பு மீட்பு துறைக்கு, கூடுதலாக 3, 400 வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
அதோடு, பாத்தாங் காலி நிலச்சரிவில் தேடி மீட்கும் பணிகளில் மோப்ப நாய்கள் மிகச் சிறந்த முறையில் சேவையாற்றியதை அடுத்து, கூடுதலாக 12 மோப்ப நாய்கள் பெறப்படவிருப்பதாகவும், மலேசிய தீயணைப்பு மீட்பு துறையின் தலைமை இயக்குநர் Datuk Seri Mohamad Hamdan Wahid தெரிவித்தார்.
ஒரு மோப்ப நாயை பெறுவதற்கும், அதை கையாள்வதற்கான திட்டத்திற்கும் 4 லட்சம் ரிங்கிட் வரை செலவாகுமென அவர் கூறினார்.