ஈப்போ, மார்ச் 1 – ஈப்போ, ஜாலான் தாமான் தாசேக்கில் Toyota Yaris காரும் தொழிற்சாலை வேனும் விபத்துக்குள்ளாகின. அந்த விபத்தில் வேன் ஓட்டுனர் காலில் கடுமையாக காயம் அடைந்தார்.
வேனில் சிக்கிக்கொண்டதால் அவர் உடனடியாக வெளியேற முடியவில்லை. விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி வேன் ஓட்டுனரை மீட்டதாக ஈப்போ தீயணைப்பு நிலையத்தின்அதிகாரி Mahmud Azaddin தெரிவித்தார்.