ஷா அலாம். பிப் 25 – 2018 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சுபாங் ஜெயாவில் சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது தீயணைப்பு வீரர் Mohammad Adib Mohd Kassim மை தாக்கியவர்களை தாம் பார்க்கவில்லையென அந்த ஆலயத்தின் நிர்வாக குழுவுக்கு தலைமையேற்றவர்களில் ஒருவரான எம். நாகராஜூ நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தபோது தெரிவித்தார்.
அந்த ஆலயத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக 17 பேர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். ஆலய வளாகத்திற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீயூட்டியதற்கு யார் பொறுப்பு என்பது தமக்கு தெரியாது என அவர் கூறினார்.
குற்றஞ்சாட்டப்பட்ட முகமட் சைபுல்லா அப்துல்லாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். கிருத்திராஜ் எழுப்பிய குறுக்கு விசாரணைக்கு பதில் அளித்தபோது நாகராஜூ இதனை தெரிவித்தார்