
கோத்தா பாரு, மே 13 – கோத்தா பாரு, Sering , Kampung Mentua னில் வீடு ஒன்று தீக்கிரையானதில் அதில் இருந்த 31 வயதுடைய Muhamad Abdul Halim மற்றும் அவரது சகோதரியான 22 வயதுடைய மாற்று திறனாளி Aisyah Abdul Halim ஆகியோர் கருகி மாண்டனர். இரவு மணி 8.30 அளவில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது தாம் அருகேயுள்ள பள்ளிவாசலுக்கு சென்றிருந்தாக உயிரிழந்த இருவரின் தாயாரான ருபியா இஸ்மாயில் தெரிவித்தார். தகவல் அறிந்து உடனடியாக வீட்டிற்கு சென்றதாகவும் எனினும் தீ கொழுந்விட்டு எரிந்ததால் தாம் கூச்சலிட்டு கதறியதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையென கண்ணீர் மல்க ருபியா இஸ்மாயில் கூறினார். தீயில் பாதிக்கப்பட்ட வீட்டின் குளியல் அறையில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.