Latest
தீயில் 3 வீடுகள் சேதம் காயம் அடைந்த மூவர் வீட்டின் கூரையிலிருந்து மீட்கப்பபட்டனர்

ஜோகூர் பாரு, மே 27 – Skudai , Taman Mutiara Rini யில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதம் அடைந்ததோடு வீட்டின் கூரைகளின் மேல் தீக்காயத்தோடு அமர்ந்திருந்த இரண்டு பதின்ம வயது மற்றும் ஒரு சிறுவனை தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள் மீட்டனர். 19 வயதுடைய Nur Hidayah Amir Hamzah,
18 வயதுடைய Nur Syazliana Shamsudin, மற்றும் அவர்களது 8 வயது சகோதரன் Muhamad Shahrukhan ஆகியோர் தீயணைப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டதாக ஸ்கூடாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி கமான்டர் kamalrulzaman Salleh தெரிவித்தார். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக Sultanah Aminah மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் அந்த வீடுகளிலிருந்த மூன்று மோட்டார்சைக்கிள்களும் சேதம் அடைந்தன.