Latestமலேசியா

தீயில் 50 மோட்டார் சைக்கிள்களும் 4 கார்களும் அழிந்தன

கோலாலம்பூர், மார்ச் 4 – கோலாலம்பூர், இந்தான் பைடூரி (Intan Baiduri) மக்கள் வீடமைப்பு பகுதியின் வாகன நிறுத்துமிடப் பகுதியில் ஏற்பட்ட தீயில் 50 மோட்டார் சைக்கிள்களும், நான்கு கார்களும் முற்றாக அழிந்தன.

அந்த தீ சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை மணி 4.22- க்கு அவசர அழைப்பைப் பெற்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 7 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட வேளையில், வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டதாக அவர் கூறினார். தீக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!