
கோலாலம்பூர், செப் 20 – கோலாலம்பூர் , செராஸ் பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியில் பெனாரா அடுக்கு மாடி குடியிருப்புப் குதியில் நிகழ்ந்த தீ விபத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன. நேற்று இரவு 9 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் அங்கிருந்த சமய வகுப்பறையும் பாதிக்கபட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் அதிகாரி முகமது ஹிஸாம் மாமாட் தெரிவித்தார். அந்த தீ விபத்தின்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 மோட்டார்சைக்கிள்களில் ஆறு 100 விழுக்காடு முழுமையாக அழிந்த நிலையில் இதர மூன்று மோட்டார்சைக்கிள்கள் 10 விழுக்காடு சேதம் அடைந்தன. இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக
முகமது ஹிஸாம் மாமாட் தெரிவித்தார்.