
கோலாலம்பூர், மார்ச் 28 – சட்டத்துறையின் முன்னாள் தலைவரான Tan Sri Tommy Thomas முன்னாள் பிரதமரான டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் மீது தீய நோக்கத்தோடு குற்றஞ்சாட்டவில்லை என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விசாரணைத் துறை நிறுவனங்களின் முழுமையான விசாரணை அறிக்கையை பெற்ற பின்னரே நஜீப்பிற்கு எதிராக அவர் குற்றச்சாட்டை கொண்டு வந்தார் என நீதிபதி டத்தோ Ahmad Bache தெரிவித்தார். Tommy Thomas சிற்கு எதிராக நஜீப் தொடுத்திருந்த வழங்கில் வழங்கிய 37 பக்க தீர்ப்பில் நீதிபதி Ahmad Bache இதனைத் தெரிவித்தார்.
திரட்டப்பட்ட அனைத்து சாட்சியங்களையும் ஆராய்ந்த பின்னர் முழுமையாக திருப்தி அடைந்த பின்னரே முன்னாள் பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கொண்டு வருவதற்கு Thomas அனுமதித்துள்ளார். எந்தவொரு உள்நோக்கம் இன்றி நஜீப்பிற்கு எதிராக நான்கு வழக்குகளில் அனைத்து 35 குற்றச்சாட்டுக்களை கொண்டுவருவதற்கு அவர் இணக்கம் தெரிவித்திருக்கிறார் என நீதிபதி Ahmad Bache தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் என்ற முறையில் நஜீப்பிற்கு எதிராக குற்றஞ்சாட்டும் கடமையைத்தான் Thomas கொண்டிந்தார் என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.